உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
- விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.
- தீராத வயிற்றுவலி ஏற்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை ேசர்ந்தவர் காவேரி (வயது 85). இவர் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் காவேரிக்கு சம்பவத்தன்று தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே காவேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.