உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2023-10-14 12:15 IST   |   Update On 2023-10-14 12:15:00 IST
  • அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
  • கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் படிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு

அரியலூர், 

அரியலூர் அரசு கலை கல்லூரிக்கு சொந்தமான நிலத்தில், அக்கல்லூரியைச் சுற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் விடுதிகள், செவிலியர்கள் விடுதிகள் என அனைத்து துறை அலுவலகங்களும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் அருகே சுத்தகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால், வகுப்புறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. இது குறித்து மாணவர்கள் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், வகுப்புறைக்குச் சென்ற மாணவர்கள், அங்கு அமர்ந்து படிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வரிடம் தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News