சாரண, சாரணியர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்
- சாரண, சாரணியர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- நல்ல பண்புகளை மாணவர்கள் பெற முடியும்
அரியலூர்:
உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் உஷா முத்துக்குமரன், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி, இயக்கத்தின் உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ேடார் முன்னிலை வகித்தனர். உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி துணை ஆய்வாளர் பேசுகையில், அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் நல்ல முறையில் செயல்பட வேண்டும். சாரண இயக்கத்தால் மாணவ, மாணவிகள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதால் தன்னம்பிக்கை, சகோதரத்துவம், பிறருக்கு உதவி செய்தல், தனக்கு வேண்டியவற்றை தானே செய்து கொள்ளும் திறன் போன்ற பல்வேறு நல்ல பண்புகளை மாணவர்கள் பெற முடியும் என்றார். முன்னதாக உடையார்பாளையம் கல்வி மாவட்ட தலைமையிடத்து ஆணையர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். முடிவில் அமைப்பு ஆணையர் முரளிதரன் நன்றி கூறினார்."