உள்ளூர் செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ரீடு தொண்டு நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

Published On 2023-01-04 13:33 IST   |   Update On 2023-01-04 13:33:00 IST
  • ரீடு தொண்டு நிறுவனத்தில் வெளிநாட்டினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்
  • பவளிநாட்டினர் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனத்தின் அன்பகத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. மேலும் சுமார் 30க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த காப்பகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்க கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே, ராபின், வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாட அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். அங்கிருந்த மாற்று திறனாளிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, கும்மி அடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். பின்னர் அனைவரும் பொங்கல் உணவை உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் தாங்களும் கலந்து கொண்டு பங்கேற்று சிறப்பித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது என்று கூறினர். நீடு நிறுவனத்தில் இருந்தவர்களும் இவ்வாண்டு வெளிநாட்டினர் தங்களுடன் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.


Tags:    

Similar News