அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பிற்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு ேதாட்டத்தில் கலெக்டர் ஆய்வு
- பொங்கல் தொகுப்பிற்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு ேதாட்டத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
- கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
அரியலூர்:
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 2,46,210 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் சுந்தரேசபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.அப்போது விவசாயிகளிடம், கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக் கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்பவேண்டாம் என்றார். இந்த ஆய்வின்போது,மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.