உள்ளூர் செய்திகள்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-04 12:01 IST   |   Update On 2023-10-04 12:01:00 IST
  • அரியலூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • விவசாயிகள் மீது காரை ஏற்றிய, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர்

அரியலூர்,

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில்,  உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூர்கெரி என்ற இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய உள்துறை இணை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலர் தண்ட பாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் மணிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News