உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் திருமண்டகுடி தனியார் சர்க்கரை ஆலை வாங்கிய ரூ.350 கோடியை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே நடத்த வேண்டும், விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.