உள்ளூர் செய்திகள்

வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-09-25 09:19 GMT   |   Update On 2023-09-25 09:19 GMT
  • அரியலூரில் கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
  • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு

அரியலூர்,

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை மூலதனக் கடனை பெற்று பயன்பெறலாம்.கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை , நிலவுடைமை தொடர்பாக 10 (1)}கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகிய ஆவணங்களுடன் கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அவரவர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினைப் பெற்று ரூ.100 பங்குத்தொகை, ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகச் சேர்ந்து மேற்கண்டுள்ள ஆவணங்களுடன் நடைமுறை மூலதனக் கடன் மனுவினைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News