உள்ளூர் செய்திகள்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி

Published On 2023-01-12 06:41 GMT   |   Update On 2023-01-12 06:41 GMT
  • பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சத்தான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது
  • இந்த உணவு பொருள்கள் அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும்.

அரியலூர்:

அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர உணவு வழங்கும் பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த மாலை நேர சிறுதானிய சிற்றுண்டியான சுண்டல், பட்டாணி, பச்சை பயிறு, தட்டைப் பயிறு, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை ஆகிய சத்தான உணவு பொருள்களை உட்கொண்டு தங்களை தேர்வுக்கு தயார்படுத்திகொள்ள வேண்டும் .இது அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும். எனவே தொடர்ந்து படித்து அதிக மதிப்பெண்களை பெற மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும் என்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, துணை தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா, வார்டு உறுப்பினர் அருள்சாமி, கல்வி ஆர்வலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், தனலட்சுமி, பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கோகிலா, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். பொதுத் தேர்வு முடியும் வரை இந்த உணவுகள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News