உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Published On 2023-01-22 12:10 IST   |   Update On 2023-01-22 12:12:00 IST
  • அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
  • வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வில் அரியலூர் நகராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட பணி, அஸ்தினாபுரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மேலக்கருப்பூரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.31.48 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி, பொய்யூர், கருப்பிலாக்கட்டளை, சின்னப்பட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, கீழகொளத்தூர், கரைவெட்டி, இலந்தைக்கூடம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆனந்தன், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News