உள்ளூர் செய்திகள்

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-22 15:35 IST   |   Update On 2023-02-22 15:35:00 IST
  • கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
  • தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது

அரியலூர்:

வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்களின் குத்தகைக்கு சாகுபடியாளர்களுக்கு நில உரிமைக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகியும், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவருமான உலகநாதன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாவட்ட செயலர் ராமநாதன், துணை செயலர் கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில், வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்ககளில் குத்தகைக்கு சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி நிலங்களை பறிக்கக் கூடாது. சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான உரிமை பட்டாவை வழங்க வேண்டும்.அதேபோல் கோவில் நிலங்களில் குடியிருப்பாளர்களுக்கு தடையின்றி உரிய சான்றிதழ் வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் பாதிப்பு ஆண்டுகளுக்கான குத்தகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்களை அவர்களின் வீட்டு மனையிலிருந்து வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.





Tags:    

Similar News