இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
- மத்திய அரசை கண்டித்து அரியலூரில் சி.பி.ஐ. கட்சியினர் மறியல் போராட்டம்
- மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்,
மத்திய அரசின் முறைகேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படாமல் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிப்பது, நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்பது, மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாதது ஆகியவற்றை கண்டித்து அரியலூர் அண்ணாசிலையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலகமாக சென்றனர். கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் அரியலூர் டி.ராயதுரை, திருமானூர் மு.கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் சொ.ராமநாதன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.