உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-03-16 09:14 IST   |   Update On 2023-03-16 09:14:00 IST
  • கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை
  • பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.வளவெட்டிகுப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமுத்து மகள் தமிழ்பொன்னி(வயது21). இவர் கீழப்பமழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்பொன்னி வழக்கம் போல் கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் தமிழ்பொன்னியை நண்பர்கள், உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து மாயமான தமிழ்பொன்னியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News