அரியலூரில் சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டம்
- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அண்ணாசிலை அருகே சிஐடியு வினர் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது
- ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்
அரியலூர்,
அரியலூரில் ஆட்டோ ஸ்டாண்ட் அறிவிப்பு பலகையை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அண்ணாசிலை அருகே சிஐடியு வினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.
அரியலூர் செட்டி ஏரி பூங்கா அருகே ஆட்டோ ஸ்டாண்டு வைக்க அனுமதி தருமாறு நகராட்சி நிர்வாகத்திடமும், மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடமும் சிஐடியு அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு நகராட்சி நிர்வாகம் இதற்கெல்லாம் அனுமதி கொடுத்ததில்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து சிஐடியு சார்பில் செட்டி ஏரி முன்பு கடந்த 17-ம் தேதி ஆட்டோ ஸ்டாண்ட் திறக்க ப்பட்டது. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நகராட்சி நிர்வாகம் கடந்த 26 -ம் தேதி அகற்றியது.
இதனைக் கண்டித்தும், மீண்டும் அதே இடத்திலேயே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட அனுமதிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.