உள்ளூர் செய்திகள்
அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது
அரியலூர்:
அரியலூர் அண்ணாசிலை அருகே சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டத்தை திருத்தக் கூடாது. தொழிலாளர் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.8 மணி நேர வேலை உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், துணைத் தலைவர் சிற்றம்பலம், பொருளாளர் கே.கண்ணன், துணைச் செயலர் சந்தனம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், குடிநீர் வடிக்கால் வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.