உள்ளூர் செய்திகள்

அரியலூரில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-08 10:28 GMT   |   Update On 2023-02-08 10:28 GMT
  • அரியலூரில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த ரெட்டிப்பாளையத்திலுள்ள அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்த வந்த தமிழக தொழிலாளர்களை வெளியேற்றி வெளிமாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே மத்திய தொழிற் சங்க மையம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் திருவேட்டை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் வெளியேற்றிய உள்ளூர் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வெளிமாநில தொழிலாளர்களை உடனடயாக வெளியேற்ற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் அளித்த விவசாயின் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் துரைசாமி, துணைத் தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம், துரைராஜ், துணைச் செயலர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News