உள்ளூர் செய்திகள்
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
- கால்நடைகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- முகாமை கடுகூர் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், க.பொய்யூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கடுகூர் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம், கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 30 பசு, கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக, 4 முதல் 8 மாத வயதுடைய பசுங்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு அடையாள காது வில்லைகள் பொருத்தப்பட்டது.