ஆண்டிமடத்தில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
- ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47).
- இவரது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட் , 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). நேற்று அதிகாலை இவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை பராமரிப்பதற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கார் செட்டில் கார் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை எழுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்த போது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட், கார் செட், 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து அரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் தானாக எரிந்ததா அல்லது வேறு யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.