உள்ளூர் செய்திகள்
- திருமண கூட்டத்தில் நுழைந்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயி தாக்கப்பட்டார்
- வழக்கு பதிந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்
அரியலூர்,
வெங்கடகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி விவசாயி. இவர் குடிபோதையில் காலனி தெரு வழியாக சென்று உள்ளார். அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் திருமணத்திற்கு கூட்டமாக வழியில் நின்றுள்ளனர். அப்போது ரெங்கசாமி செல்வதற்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வெங்கடாசலம்(50), ராமசாமி(38) மற்றும் 2 நபர்கள் சேர்ந்து ரெங்கசாமியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கசாமி அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் ரெங்கசாமி மனைவி சுவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாசலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.