- அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 146 பா.ஜ.க.வினர் கைது
- டால்மியா சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் நடவடிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், பனங்கூர் கிராம சாலை சேதமடைய காரணமான டால்மியா சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைக் கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபா.ஜ.க.வினர் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.
டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதால் அங்குள் பனங்கூர் கிராமச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பா.ஜ.க. மாநில துணைச் செயலர் கருப்பு.முருகானந்தம் தலைமையில், மாவட்டத் தலைவர் அய்யப்பன் முன்னிலையில், அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினரை பெரம்பலூர் சாலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 146 பேரை கைது செய்யப்பட்டனர்.