உள்ளூர் செய்திகள்
ராஜேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி ஆடிதிருவாதிரை திருவிழா நடத்த ஏற்பாடு
- கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு அறநிலைத்துறை சார்பாக பராமரித்து வருகின்றனர்.
- ஆடி திருவாதிரை அரசு விழாவாக 2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தாசில்தார் ஸ்ரீதர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிக பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு அறநிலைத்துறை சார்பாக பராமரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோவிலில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை அரசு விழாவாக 2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தாசில்தார் ஸ்ரீதர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.