உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்துக்கு திட்டம், நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2023-02-09 12:30 IST   |   Update On 2023-02-09 12:30:00 IST
  • அரியலூர் மாவட்டத்துக்கு திட்டம், நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்
  • நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அரியலூர்:

அரியலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அரியலூர் மாவட்ட நண்பர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில். அரியலூர் இன்றும், நாளையும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் பகுதிகளுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரியலூர் மாவட்ட மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லையை விரிவுப்படுத்த வேண்டும், ஒட்டு மொத்த அரியலூர் மாவட்டத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கு வகை செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் விக்டர், நல்லப்பன், புகழேந்தி, புலவர் அரங்கநாடன், தமிழ்களம் இளவரசன், வழக்குரைஞர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேலாயுதம் சிறப்புரையாற்றினார். இதில் நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டார். முன்னதாக சமூக ஆர்வலர் ஜான்.திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.


Tags:    

Similar News