உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

Published On 2023-08-01 11:57 IST   |   Update On 2023-08-01 13:02:00 IST
  • குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
  • குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணவதி கொடியசைத்து தொடக்கி வைத்தார்

அரியலூர்,

ஆள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.பேரணியை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் அன்னை தெரசா பாரா மெடிக்கல் மற்றும் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு போதை பொருள்கள் பழக்கம், குழந்தை கடத்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்போம், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.பேரணியில், அன்னை தெரசா பாரா மெடிக்கல் தாளாளர் முரளிதரன், சுபம் மதுபோதை மீட்பு மைய செயலாளர் அருண்பிரசாத், ஆலோசகர் நித்திஷ், ஆசிரியர்கள் சித்ரா, கோவிந்தம்மாள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News