உள்ளூர் செய்திகள்

குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை

Published On 2022-11-16 14:45 IST   |   Update On 2022-11-16 14:45:00 IST
  • ளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 10-வது வார்டுகளை இணைக்கும் வகையில் உள்ள பலத்தான்குளத்தை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்த குளத்தில் குளிப்பது, துணிகள் துவைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆகாயத்தாமரை செடி குளத்தைச் சுற்றி படர்ந்து வளர்ந்து கிடக்கிறது. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருவதோடு தொற்று நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் அந்த குளத்திலிருந்து பாம்புகள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அருகில் உள்ள வீட்டின் உள்ளே வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஒரு வருடம் காலமாக அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு கூட மிக சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது வெற்றி பெற்ற ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமாரிடம் அந்தப் பகுதி தி.மு.க. கவுன்சிலர் வெற்றி செல்வன் பலமுறை மனு அளித்தும் நேரில் சென்று தெரிவித்தும் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தராததால் அந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக அதனை அகற்றி வருகின்றனர். எனவே இந்த குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

Similar News