உள்ளூர் செய்திகள்
தா.பழூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
- தா.பழூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யபட்டார்
- இதில் காயமடைந்த கனகவல்லி மற்றும் சாமிக்கண்ணு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ மூலமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வேரா நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி கனகவல்லி (வயது 55). சாமி கண்ணுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வினோத் (34) என்பவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் இடபிரச்சனை தொடர்பாக தகாத வார்த்தைகளால் திட்டி சாமிக்கண்ணுவை அடித்துள்ளனர். இந்த சண்டையை தடுக்க வந்த கனகவள்ளியும் தாக்கப்பட்டு உள்ளார். இதில் காயமடைந்த கனகவல்லி மற்றும் சாமிக்கண்ணு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ மூலமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தா.பழூர் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து, வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.