சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட்(எ) செந்தமிழ்ச்செல்வன்(வயது 31) பரோட்டா மாஸ்டரான இவர், கடந்த 4.7.2021 அன்று தனது உறவினர் மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் செந்தமிழ்ச்செல்வனை ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.