உள்ளூர் செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
- அரியலூரில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்
- சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருகளப்பூர் காலனி தெருவில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த நேரு (வயது 45), பாஸ்கர் (36), குமாரசாமி (32), மணிவாசகம் (40), காசி (40), வீரமணி (30), பாலமுருகன் (35) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது.