உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-01-23 12:16 IST   |   Update On 2023-01-23 12:16:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு புளியந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கங்கவடங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(வயது 42), மும்மூர்த்தி, ஜெயக்குமார், சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தமிழ்நாதன், சுந்தரவடிவேல், பாலா, கார்த்திக், பாலையா, அன்பழகன் ஆகிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News