உள்ளூர் செய்திகள்

ரூ.7.67 கோடி மதிப்பில் 33 வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

Published On 2023-08-02 09:19 IST   |   Update On 2023-08-02 09:19:00 IST
  • ரூ.7.67 கோடி மதிப்பில் 33 வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது
  • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

 அரியலூர்,

அரியலூர் ஒன்றியம், உசேனாபாத் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் (40 மீ) அமைக்கும் பணிக்கும், ரூ.3.02 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைத்தல் பணிக்கும், ரூ.4.78 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் மற்றும் மணல் வடிகட்டி உறிஞ்சுக்குழி (140 மீ) அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து அவர், மோரக்குழி, நுரையூர் ,அயன் ஆத்தூர், பூமுடையான்பட்டி, இலுப்பையூர் , பொய்யாதநல்லூர், தாமரைக்குளம் வெங்கட்ராமபுரம், தவுத்தாய்க்குளம் , அம்மாக்குளம் , வாலாஜாநகரம், பெரியநாகலூர் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 33 பணிக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ண தலைமை வகித்தார். அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News