ஜெயங்கொண்டம் வட்டிக்கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்ற முயன்ற 3 பேர் கைது
- ஜெயங்கொண்டம் வட்டிக்கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வட்டி கடை நடத்தி வருபவர் லாது லால் ஜெயின் மகன் அணில் ஜெயின் (வயது 33). இவரது கடையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த மகாதேவன் மகன் துரை (63) என்பவர் அடிக்கடி பொருட்களை அடமானமாக வைத்து பணம் பெற்று செல்வார். பின்னர் மீட்டு செல்வார். இதேபோல் சம்பவத்தன்று துரை மற்றும் அவரது நண்பர்களான சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த குப்புசாமி மகன் தர்மலிங்கம் (70), அரியலூர் கணபதி நகரை சேர்ந்த அழகு முத்து மகன் சரவணன் (51) ஆகிய மூவரும் சேர்ந்து 4 ஜோடி கொலுசுகளை வெள்ளி கொலுசு என கூறி அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த வெள்ளி கொலுசுகளை சோதனை செய்து பார்த்தபோது அது வெள்ளி கொலுசுகள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அணில் ஜெயின் வெள்ளி கொலுசு என கூறி ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த துரை, தர்மலிங்கம், சரவணன் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.