உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது

Published On 2023-06-09 11:17 IST   |   Update On 2023-06-09 11:17:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யபட்டனர்
  • மாமனார், மாமியார் சினேகாவை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாலுசாமி (வயது 35). இவருக்கும் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள வாளரை க்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகள் சினேகா (23) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலுசாமி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மாமனார், மாமியார் சினேகாவை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத ேநரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சினேகாவின் தந்தை நல்லதம்பி இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் டி.எஸ்.பி.ராஜா சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து சினேகாவின் கணவர் பாலுசாமி, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் சாவித்திரி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News