உள்ளூர் செய்திகள்

அரசு பேருந்து லாரி மோதிய விபத்தில் 11 பேர்கள் காயம்

Published On 2023-10-09 14:22 IST   |   Update On 2023-10-09 14:22:00 IST
  • அரியலூரில் அரசு பேருந்து லாரி மோதிய விபத்தில் 11 பேர்கள் காயமடைந்தனர்
  • மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்

அரியலூரிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பேருந்து உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் திருப்பத்தில் எதிர்புறம் வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோதியதில் அரசு பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் இரங்கி மின்மாற்றியில் மோதி நின்றது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது, இந்த விபத்தில் டிரைவர் தனசாமி(50), நடத்துனர்(35), பாக்கியா, மங்கையர்க்கரசி, பரணிதரன், சூர்யா, தனம்,  பெரியசாமி, மணிமேகலை உட்பட 11 பேர்கள் காயமடைந்தனர், காயமடைந்த அனைவரும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்,  தகவலறிந்த  அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா  நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்கள், தீவிரமாக கண்காணித்து தேவையான மருத்துவசிகிச்சை அளிக்கவேண்டும் என மருத்துவரிடம் அறிவுறுத்தினார்கள், இந்த சாலை விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News