உள்ளூர் செய்திகள்

சிறப்பான பணி செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தூய்மை இயக்கத்தில் சிறப்பான பணி செய்தவர்களுக்கு பாராட்டு சான்று

Published On 2023-02-26 07:57 GMT   |   Update On 2023-02-26 07:57 GMT
  • ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.
  • கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார்.

நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், எழிலரசன்நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாராட்டு சான்று வழங்கி பேசும்போது,

திருத்துறைப்பூண்டியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் செயல்படுத்த ப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நகராட்சியின் 24 வார்டுகளிலும், தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்த அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.

அப்போது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியம், வீடுகளிலேயே குப்பைகளை மக்கவைக்கும் அமைப்பை ஏற்படுத்துதல், கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தூய்மையை கடைப்பிடிக்கும் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு பாராட்டு சான்று வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

இதன்மூலம் தூய்மையான நகரை கொண்டுவர முடியும் என்றார்.

சிறப்பாக செயல்படும் மங்கை மகால் திருமண மண்டபத்திற்கும், தூய்மை குறித்த விழிப்புணர்வு பணி செய்யும் பாலம் சேவை நிறுவனத்திற்கும் , சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்க ளுக்கு நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைமா தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் அம்பிகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News