உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து இன்ஸ்பெக்டரை பாராட்டிய காட்சி

போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா

Published On 2023-01-21 09:27 GMT   |   Update On 2023-01-21 09:27 GMT
  • பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து.
  • பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

நெல்லை:

பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர் பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து மக்கள் சிரமமின்றி செல்வதற்கு வழிவகை செய்துள்ளார்.

மேலும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இவரது பணியை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து, மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர்.

இதுகுறித்து சோலைக்குள் நெல்லை அமைப்பின் தலைவர் நாகராஜன் கூறும் போது,

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பதவி ஏற்ற பிறகு பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார். போக்குவரத்து காவலர்கள் இல்லாத போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தான் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் முடிந்தவரை மரங்களை நட்டு அந்த இடத்தை பசுமையாக மாற்றியவர். ஊனமுற்றவர்களை எங்கு கண்டாலும் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்பவர். இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பின் சார்பில் பாராட்டுகிறோம் என்றார். நிகழ்ச்சியில் சோலைக்குள் நெல்லை அமைப்பை சார்ந்த மீனாட்சி சுந்தரம், விநாயகம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News