உள்ளூர் செய்திகள்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-07-20 06:58 GMT   |   Update On 2023-07-20 06:58 GMT
  • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
  • சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும்.

கடலூர்:

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம்,முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடையவராயின் அதற்குரிய ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News