உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் சந்தையில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த காட்சி.

தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பா.ம.க, சுயேட்சை கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-12-01 09:39 GMT   |   Update On 2022-12-01 09:39 GMT
  • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
  • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

Tags:    

Similar News