உள்ளூர் செய்திகள்

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

கோவில்பட்டியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி

Published On 2023-01-31 14:48 IST   |   Update On 2023-01-31 14:48:00 IST
  • கோவில்பட்டியில் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையம் சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது. கோவில்பட்டி தனியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி ஏ.பி.சி. அணிகள், வாரியர்ஸ் கைப்பந்து கழகம், காவல்துறை அணி, இலுப்பையூரணி தாமஸ் நகர் அணி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இறுதி போட்டியில், வாரியர்ஸ் கைப்பந்து கழக அணியும், எஸ்.எஸ்.டி.எம். பி அணியும் மோதின. இதில் 15 - 13, 15 - 7 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது இடத்தை எஸ்.எஸ்.டி.எம். 'பி' அணியும், 3-வது இடத்தை காவல்துறை அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, தர்மராஜ், ரவீந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News