உள்ளூர் செய்திகள்

போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் கலந்து கொண்ட போது எடுத்தபடம்.

பாளை டக்கரம்மாள்புரத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-19 09:19 GMT   |   Update On 2022-07-19 09:19 GMT
  • போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
  • நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை:

போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.

நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாளை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் தேவா தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News