சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
மயூரநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
- அரிசி சாதம் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை.
- சேந்தங்குடி வள்ளலார் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை மற்றும் சோடச ஆராதனை செய்யப்பட்டது.
இதில் துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் சர்வோதயம், சதீஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் சேந்தங்குடி வள்ளலார் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆலய குருக்கள் பாலச்சந்திர சிவாச்சாரியார் பூஜைகள் செய்தனர்.
இதில் கண்காணிப்பாளர் அகோரம், நகர மன்ற உறுப்பி னர் ரமேஷ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொன்டு தரிசனம் செய்தனர்.