உள்ளூர் செய்திகள்

கால்நடை சிறப்பு முகாம்

கால்நடை சிறப்பு முகாம்

Published On 2022-09-17 10:05 GMT   |   Update On 2022-09-17 10:05 GMT
  • பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
  • முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை ஊராட்சி புதுக்குடி கிராமத்தில் நிலவள, நீர்வளத்திட்ட கால்நடை சிறப்பு முகாம் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமை கும்பகோணம் கால்நடை கோட்ட்ட உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் துவக்கி வைத்தார்.

முகாமில், கணபதி அக்ரஹாரம் கால்நடை மருத்துவர் சங்கமித்ரா, திருவைகாவூர் கால்நடை உதவி மருத்துவர் அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஆய்வு, குடல் புழுநீக்கம் மலடு நீக்கம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் காயத்திரி கேசவன், ஊராட்சி உறுப்பினர் ராதிகா பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News