உள்ளூர் செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து முதியவர் பலி

Published On 2022-09-05 12:28 IST   |   Update On 2022-09-05 12:28:00 IST
  • சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
  • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்க ன்பாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (73).

சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜோதிநாதன் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த போது ஜோதிநாதன் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News