உள்ளூர் செய்திகள்

காரமடையில் விபத்தில் முதியவர் பலி

Published On 2023-06-12 15:17 IST   |   Update On 2023-06-12 15:17:00 IST
  • பழனிச்சாமி மர மில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
  • பழனிச்சாமி சாலை ஓரத்தில் நடந்து வந்தார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை மங்களக்கரைபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (75).மர மில் தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று சாயங்காலம் காரமடை- மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள வேளாங்கண்ணி பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஹிமாலயன் என்பவர் பழனிசாமி மீது மோதி உள்ளார்.

இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News