தியாகதுருகத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஆசாரி குளத்தில் கழிநீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.
தியாகதுருகத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளமாக தேங்கிய கழிவு நீர்
- தியாகதுருகத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளமாக கழிவு நீர் தேங்கியது.
- கழிவு நீர் கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் செல்வா நகர் பகுதியில் ஆசாரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் பேட்டை தெரு, செல்வா நகர், ஒட்ட தெரு, ஔவையார் தெரு, ஜின்னா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.
இந்த கழிவு நீர் செல்வ நகர் பகுதியில் உள்ள ஆசாரி குளத்தில் குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. இவ்வாறு கழிவுநீர் குளம் முழுவதும் தேங்கியதால் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் கழிவுநீராக உள்ள தாகவும், தண்ணீர் குடிக்க முடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பாக நேரில் சென்று ஆய்வு செய்து, செல்வா நகரில் இருந்து வரும் பிரதான கழிவு நீர் கால்வாயை பேரூராட்சி அருகே செல்லும் பிரதான கால்வாயுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.