உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் மாநில தலைவர் ஜங்சன் அண்ணாதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட காட்சி. 

பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் திடீர் மறியல்-பரபரப்பு

Published On 2023-03-18 15:44 IST   |   Update On 2023-03-18 15:44:00 IST
  • அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.
  • பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.

இதனை கால்வாய் பணிக்காக முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. உடனே பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News