உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

கடலூரில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-06-09 12:55 IST   |   Update On 2023-06-09 12:55:00 IST
  • முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.
  • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தில் வாயிலாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்தார். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம். வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்தி ட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

18 முதல் 55 வயதுக்குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படுத்தக்கூடிய தொழில்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக்லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்புலன்ஸ் சேவை, உடற்பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்குவோரும் இத்தி ட்டத்தில் பயன்பெறலாம். மேலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்,மாவட்ட தொழில் மையம் விஜயகுமார் , மாவட்ட மேலாளர் தாட்கோ மணிமேகலை , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா ,உதவி பொறியாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News