உள்ளூர் செய்திகள்
நெல்லையில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டம்
- ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன், பொரு ளாளர் ராஜா முகம்மது, முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்த வகையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே அரசு இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதில் நிர்வாகிகள் சங்கர நாராயணன், ராமநாதன், குருவிநாயகம், இந்துமதி, மகாராசி, செண்பகலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.