உள்ளூர் செய்திகள்

மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்.

ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயதாமரை செடிகள்

Published On 2022-11-15 07:52 GMT   |   Update On 2022-11-15 07:52 GMT
  • மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
  • கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடையும் சூழ்நிலை.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முள்ளியாறு மற்றும் மாணங்கொண்டான் ஆறு சுமார் 20 கி.மீ தூரம் வரை பாசன மற்றும் வடிகால் ஆறாக ஓடுகிறது.இந்த ஆறுகளில் வாய்மேடு , மருதூர் , ஆயக்காரன்புலம் ,தாணி கோட்டகம் பகுதிகளிலில் 10 கி.மீ தூரம் அதிக அளவில் ஆகாயதாமரை மண்டிக்கிடக்கிறது.

ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் தண்ணீர் தெரியாத அளவிற்கு மிக நெருக்கமாக மண்டிக்கி டப்பதால் இந்த பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில்தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக தான் தண்ணீர் வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரை நிரம்பி தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News