ஓசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
ஓசூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், மாநகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் - பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கி, கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை உற்சாகமாகவும், சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி கூட்டத்தில் பேசினார்.
மேலும் இதில், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் எம்.அசோகா, பி.ஆர் வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், கூட்டுறவு சங்க தலைவர் கே.சாக்கப்பா, ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ் ரெட்டி, ரவிகுமார், வட்ட செயலாளர் குபேரன் என்ற சங்கர் மற்றும் தேவன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.