உள்ளூர் செய்திகள்

நெல்லை:

நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது.

ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி மூட்டத்துடன் சாலைகள் காணப்படுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்க்கெட்டு களில் அந்த 2 பூக்களின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ‌.3,000 வரை விற்பனை ஆகிறது.

அதேபோல் பிச்சி பூக்கள் ஒரு கிலோ ரூ.1,250 வரை நேற்று விற்கப்பட்டது. இன்று அவற்றின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரோஜாப்பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

கடும் பனிப்பொழிவு-புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் மல்லிகைப்பூ விலை உயர்வுகிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை

Published On 2022-12-31 09:33 GMT   |   Update On 2022-12-31 09:33 GMT
  • காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
  • நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ‌.3,000 வரை விற்பனை ஆகிறது.

நெல்லை:

நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது.

ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி மூட்டத்துடன் சாலைகள் காணப்படுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்க்கெட்டு களில் அந்த 2 பூக்களின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது.

அதேபோல் பிச்சி பூக்கள் ஒரு கிலோ ரூ.1,250 வரை நேற்று விற்கப்பட்டது. இன்று அவற்றின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரோஜாப்பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

Tags:    

Similar News