உள்ளூர் செய்திகள்

வேளாண் பட்ஜெட்- எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம்

Published On 2023-03-21 11:26 IST   |   Update On 2023-03-21 11:26:00 IST
  • சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.
  • உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.

உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவித்த வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்.

பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News